ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சன்டக்கோழி, பையா என பல கமர்ஷியல் வெற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். ஆனால், அவர் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. கடைசியாக அவர் இயக்கிய தி வாரியர் படமும் அவருக்கு வெற்றியை தரவில்லை. சமீபகாலமாக பையா 2 படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறாராம். இந்த படத்திற்கு கதை எழுதுவது வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.