எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது. மொத்தம் 14 போட்டியாளர்கள் நேற்று வீட்டிற்குள் நுழைந்தார்கள். தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த நடிகைகள் கிரண், ஷகிலா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் தவிர சில தெலுங்கு நடிகர்கள், நடிகைகள், யு டியூபர்கள் என பங்கேற்றுள்ளார்கள்.
இந்த 7வது சீசனைத் தொகுத்து வழங்க நடிகர் நாகார்ஜூனா போன சீசனை விட சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல். நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கு நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, நவின் பொலிஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டு அவர்களுடைய படங்களை விளம்பரப்படுத்தினார்கள்.
அடுத்த 100 நாட்களுக்கு நடக்க உள்ள இந்த நிகழ்ச்சி கடந்த சீசன்களைப் போலவே வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் சீசன் 7' விரைவில் ஆரம்பமாக உள்ளது.