
தொடர்ந்து தள்ளிப் போகும் பிரபாஸ் படங்கள்
"பாகுபலி 2" படத்தை முதலில் 2016ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். பின் நவம்பர் மாதத்திற்குத் தள்ளி வைத்து கடைசியாக 2017 ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட்டார்கள். அப்படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்த "சாஹோ" படத்தை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டு பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிட்டார்கள்.
பிரபாஸ் நடித்து 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருந்த படம் "ராதே ஷ்யாம்". ஆனால், படத்தை மார்ச் மாதம் தான் வெளியிட்டார்கள். அதற்கடுத்து பிரபாஸ் நடித்து இந்த ஆண்டு ஜுன் மாதம் வெளியான படம் "ஆதி புருஷ்". இப்படத்தை முதலில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டு அதன் பின் வேறு சில தேதிகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டு கடைசியாக வெளியானது.
இப்போது பிரபாஸ் நடித்து வரும் "சலார்" படத்தை செப்டம்பர் 28ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து படத்தைத் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் நவம்பர் 24ம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது.















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!