நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாகிறது.
ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி யு-டியூபில் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை நிகழ்த்தியது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் செப்டம்பர் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக அறிவித்தனர். இப்போது இந்த படத்தின் டிரைலரை வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜவான் படத்துடன் இணைத்து சலார் டிரைலரை திரையரங்குகளில் இடைவேளை நேரத்தில் திரையிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.