ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது |
கிருஷ்ணகிரி அருகிலுள்ள தன் மூதாதையர்கள் வாழ்ந்த ஊருக்கு நடிகர் ரஜினி திடீர் பயணமாக வந்து சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்துள்ளது நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினியின் மூதாதையர்கள், பெற்றோர் இக்கிராமத்தில் வாழ்ந்தனர். அவரது உறவினர்கள், இப்பகுதியில் இன்றும் வசித்து வருகின்றனர். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் ரஜினி, தன் பூர்வீக கிராமத்தில் தன் பெற்றோர் ரானோஜிராவ், - ராம்பாய் நினைவகம் கட்ட, 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன் தன் பெற்றோரின் நினைவு மண்டபத்தை கட்டிய ரஜினி அங்கு வந்து பார்வையிடவில்லை.
ஜெயிலர் திரைப்படம் ரிலீசுக்கு முன் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட ரஜினிகாந்த், வடமாநிலங்களில் சுற்றுப்பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். நாச்சிக்குப்பத்திற்கு, தன் சகோதரர் சத்தியநாராயண ராவுடன் வருகை தந்தார். மதியம், 11:30 மணியளவில், நாச்சிக்குப்பத்திற்கு வந்தவர், நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர், சுவாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தோட்டத்தை சுற்றி பார்த்த ரஜினிகாந்த், அங்கிருந்த தன் உறவினர்கள், தோட்டத்தில் பணிபுரிபவர்களிடம் நலம் விசாரித்தார். 15 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ரஜினிகாந்த், கார் மூலம் கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
நடிகர் ரஜினி வந்துள்ளதை அறிந்து அங்கு செல்வதற்குள், அவர் கிளம்பி சென்றதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.