ராஜா சாப் படப்பிடிப்பில் பிரபாஸிற்கு காயம் : ஜப்பான் ட்ரிப் கேன்சல் | படை தலைவன் ‛ஏஐ' விஜயகாந்த் பற்றி இயக்குனர் அன்பு | ஐந்து நாட்களில் 6 முறை விமானத்தில் பயணித்த த்ரிஷா | ஓடிடியில் சாதனை படைத்த சூர்யாவின் கங்குவா | இளையராஜா பயோபிக் படம் டிராப் இல்லை | மார்க் ஆண்டனி 2ம் பாகம் உருவாகிறதா? | பாலிவுட்டில் சந்தோஷ் நாராயணன் : சல்மான் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசை | வைரலான த்ரிஷாவின் இன்ஸ்டா பதிவு | “இதயக்கனி”யை பறித்த இயக்குநர் வழங்கிய “வெள்ளை ரோஜா” | புது சீரியலில் கமிட்டான ஆல்யா மானசா |
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் நடித்திருக்கும் குஷி படம் வருகிற 1ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் நெருக்கமாக இருந்தார்கள். சமந்தாவை வானளாவ புகழ்ந்து பேசினார் விஜய் தேவரகொண்டா. கையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் சமந்தாவுடன் நள்ளிரவில் வீடியோ காலில் பேசி கடலை போட்டிருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அதனை தன் இஸ்ஸ்ட்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா வீடியோ கால் செய்ய சமந்தாவோ, “ஏய், என்னப்பா, எல்லாம் ஓகேவா” என கேட்கிறார். அதற்கு ஒன்னுமில்லை உங்களை மிஸ் பண்ணினேன், நான் நாக் நாக் ஜோக் சொல்லப் போகிறேன் என விஜய் தேவரகொண்டா கூறியதை கேட்ட சமந்தாவோ, “லாஸ் ஏஞ்சல்ஸில் 1.30 மணி, இந்த நேரத்தில் ஜோக் கேட்க விரும்பவில்லை” என்கிறார்.
ஆனாலும் விஜய் தேவரகொண்டா விடுவதாக இல்லை. இதையடுத்து சரி என்று சமந்தா சொல்ல நாக் நாக் என்றார் விஜய் தேவரகொண்டா. யார் என்று சமந்தா கேட்க, நா என்றார் விஜய். நா என்றால் யார் என்று சமந்தா கேட்க, குஷி படத்தில் வரும் நா ரோஜா நுவ்வே பாடலை பாடுகிறார் விஜய் தேவரகொண்டா. இப்படியாக போகிறது அந்த வீடியோ.
இவை எல்லாமே குஷி படத்தின் புரமோசனுக்குத்தான் என்றாலும் இருவருக்கும் இடையில் சமீபகாலமாக ஒரு கெமிஸ்ட்ரி உருவாகி இருப்பதாக சொல்கிறார்கள்.