அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் கடந்த வெள்ளியன்று குஷி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சிவா நிர்வானா என்பவர் இயக்கியிருந்தார். கணவன்-மனைவியின் ஈகோ பிரச்னையை வேறு ஒரு வித்தியாச பின்னணியில் சொல்லி இருகிறார்கள். அந்த வகையில் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்துள்ளது. குறிப்பாக இதற்கு முந்தைய லைகர் பட தோல்வியால் துவண்டிருந்த விஜய் தேவரகொண்டாவுக்கும், சாகுந்தலம் படம் கொடுத்த சரிவால் சங்கடப்பட்ட சமந்தாவுக்கும் மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது தம்பி ஆனந்த் தேவரகொண்டா உள்ளிட்ட குடும்பத்தினருடன் தெலுங்கானாவில் உள்ள யாதாத்ரி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். கடந்த மாதம் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த பேபி திரைப்படமும் அவருக்கு முதல் ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.