ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

சமீபத்தில் 69வது இந்திய திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த நடிகராக புஷ்பா படத்தில் நடித்ததற்காக நடிகர் அல்லு அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் இத்தனை வருடங்களில் முதன்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெரும் நடிகர் அல்லு அர்ஜுன் தான் என்கிற பெருமையும் இதனுடன் சேர்ந்துள்ளது.
பொதுவாகவே கலைப் படைப்பில் நடித்த நடிகர்களுக்குத் தான் பெரும்பாலும் தேசிய விருது வழங்கப்படுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் புஷ்பா என்கிற கமர்ஷியல் படத்தில் புஷ்பராஜ் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அவருக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும் என அந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
புஷ்பா படம் வெளியாவதற்கு முன்பு அதன் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “புஷ்பராஜூக்கு (அல்லு அர்ஜுன்) தேசிய விருது மட்டுமல்ல, எல்லா விருதுகளும் நிச்சயம் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் முதலில் வருத்தப்படுபவள் நானாகத்தான் இருப்பேன்” என்று உற்சாகமாக பேசி இருந்தார். அவர் சொன்னபடி தற்போது அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்துவிட்டது. இதனால் தற்போது ராஷ்மிகா பேசிய அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




