அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய அஜித் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா சுரேந்திரன். தற்போது இளம்பெண்ணாக வளர்ந்து விட்ட அவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் இன்னும் சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'கிங் ஆப் கொத்தா' திரைப்படத்தில் துல்கர் சல்மானின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் யாரும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிட முடியாதபடி முகத்தில் மாஸ்க் அணிந்து இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்து ரசித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் நான் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் முதல் படம். தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த படத்தைப் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றாலும் ஒரு மிகப்பெரிய படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் அனிகா சுரேந்திரன்.