அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தென்னிந்திய மொழிகளையும் தாண்டி பாலிவுட் வரை கால் பதித்து விட்டார் துல்கர் சல்மான்.. அவர் நடித்த சீதாராமம் படம் வெளியாகி ஒரு வருட கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கிங் ஆப் கோதா'. மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக இது வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள சீனியர் இயக்குனர் ஜோஷியின் மகன் ஆவார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி ‛கிங் ஆப் கோதா' வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்துள்ள துல்கர் சல்மான் ஐதராபாத்தில் இந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர்களான நானி மற்றும் ராணா இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.