வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த 'ஜெயிலர்' படத்திற்கு உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இப்படம் அங்கெல்லாம் 105 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் படத்தை வெளியிட்டுள்ள பிரைம் மீடியா நிறுவனம் அங்கு 'ஜெயிலர்' படத்தின் வசூல் 4 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதர நாடுகளில் உள்ள வினியோகஸ்தர்கள் பட வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் வசூல் தொகை பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. அமெரிக்காவை அடுத்து அரேபிய நாடுகளில் 32 கோடி, மலேசியாவில் 17 கோடி, ஐரோப்பா மற்றும் இலங்கையில் 13 கோடி, இங்கிலாந்து, ஐயர்லாந்து நாடுகளில் 8 கோடி, சிங்கப்பூரில் 8 கோடி, ஆஸ்திரேலியாவில் 6 கோடி, கனடாவில் 6 கோடி, சவூதி அரேபியாவில் 3 கோடி, ஆஸ்திரேலியாவில் 6 கோடி, நியூசிலாந்தில் 70 லட்சம் வரையில் வசூலித்திருக்கிறதென தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் 85 கோடி, தெலுங்கில் 35 கோடி, கர்நாடகாவில் 32 கோடி, கேரளாவில் 24 கோடி, வட இந்தியாவில் 5 கோடி என மொத்தமாக உலக அளவில் 310 கோடியைக் கடந்திருக்கிறது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தின் வசூலை 'ஜெயிலர்' முறியடிக்குமா என்பதே இப்போது ரஜினி, கமல் ரசிகர்களிடையிலான சமூக வலைத்தள சண்டையாக இருந்து வருகிறது.