'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து 2015ல் வெளிவந்த படம் 'வேதாளம்'. அஜித்தின் திரையுலக வரலாற்றில் அதிக வசூலைப் பெற்ற படங்களில் அந்தப் படமும் ஒன்று. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தன. அஜித்தின் நடிப்பு, திரைக்கதையில் திருப்புமுனைகள், தங்கை கதாபாத்திரம், பிளாஷ்பேக் காட்சிகள் என எத்தனையோ சொல்லலாம்.
அந்தப் படத்தைத் தெலுங்கு ரசிகர்களும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரீமேக் செய்ய விரும்பி நடித்தார் சிரஞ்சீவி. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தமிழில் இருந்த பல முக்கியமான விஷயங்களை தெலுங்கில் மாற்றியதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம் என தெலுங்கு விமர்சகர்களே குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சிரஞ்சீவியின் ஹீரோயிசம், தங்கை கதாபாத்திரத்தில் எடுபடாத கீர்த்தி சுரேஷ் என சில விஷயங்கள் படத்தின் வெற்றியைக் குலைத்திருக்கின்றன. தமிழில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'அண்ணாத்த' படம் தோல்வியடைந்தது. அது போல தெலுங்கில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'போலா சங்கர்' படமும் தோல்வியடைந்துள்ளது.
சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வந்த பிறகு அவர் நடித்த நேரடித் தெலுங்குப் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் ஓரளவாவது வரவேற்பு தந்தார்கள். அதே சமயம் அவர் நடித்த ரீமேக் படங்களான 'காட்பாதர், போலா சங்கர்' ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ரீமேக் படங்களில் மீண்டும் நடிப்பதை சிரஞ்சீவி 'ரீதிங்க்' செய்ய வேண்டும் என பெரும்பாலான விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.