என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் | 'பராசக்தி'யை ஓடிடி வெளியீட்டை தடுக்க கோர்ட் மறுப்பு |

மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி வெளியீட்டில் இருந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதத்தினால் தள்ளி சென்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.




