ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் | சிறிய படங்களின் பிரச்னைகள் தீருமா? |

2021ம் ஆண்டிற்கான தேசிய விருது வென்றவர்கள் பெயர்களை நேற்று அறிவித்தனர். தமிழ் சினிமாவில் சிறந்த படம் கடைசி விவசாயி. இதில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டி அவர்களுக்கு சிறப்பு விருது அறிவித்தனர் மற்றும் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயவா' எனும் பாடலுக்கான சிறந்த பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தனர்.
தமிழிலிருந்து ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களை தேர்வு குழுவினர் நிராகரித்ததால் நேற்று நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்காக விருது கிடைக்காததால் இதயம் உடைந்த இமோஜியை பதிவிட்டு ஜெய்பீம் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், நானி நடித்த ஷாம் ஷிங்கா ராய் படமும் தேர்வு குழுவினர்கள் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.