ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
நாகசைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் 'கஸ்டடி' என்ற படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்குகிறார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இது மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாவதால் நாகசைதன்யாவும், இயக்குனரும் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அவர்களோடு பழகி தங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நாயகிக்கும், நாயகனுக்கும் சமமான பங்களிப்பு இருப்பதால் நாயகி தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு வாரம் வரை மீனவ பெண்களோடு தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.