ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
சினிமாவை அடிப்படையாக கொண்ட பல தீம் பார்க்குகள் உலகம் முழுக்க உள்ளது. யுனிவர்சல் தீம் பார்க் ஹாலிவுட் சினிமாவை அடிப்படையாக கொண்டது. அதாவது ஹாலிவுட் சினிமாவில் இடம் பெற்ற டைனோசர் காட்டுக்குள் பயணம், பைரேட்ஸ் ஆப்தி கரேபியன் பாணியில் கடல் கொள்ளை அனுபவம் இப்படி சினிமாவோடு தொடர்புடையவை இருக்கும்.
இதே போன்ற ஒரு சினிமா தீம் பார்க்கை பெங்களூருவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேசன் 'ஜாலிவுட்' என்ற பெயரில் தொடங்கி உள்ளார். இதனை கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தொடங்கி வைத்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதுகுறித்து ஐசரி கணேஷ் கூறும்போது, "டைட்டானிக், தி லாஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஐரோப்பிய பின்னணியிலான தெரு, ரோமன்சியா, பல்வேறு நீர் பூங்காக்கள் மற்றும் கடல் அலைகளைக் கொண்ட குளம் போன்ற அம்சங்களை கொண்டது இது. புதுமையான சினிமா அனுபவத்தை தேடுபவர்களுக்கான பொழுதுபோக்கு களமாக 'ஜாலிவுட்' அமையும்" என்றார்.