டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ.375 கோடியே 40 லட்சம் வசூலித்ததாக படத்தைத் தயாரித்த நிறுவனம் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வார வசூலில் இது அதிகத் தொகை என்றும் சொன்னார்கள்.
அதன்பின் கடந்த நான்கு நாட்களில் இப்படம் ரூ.125 கோடி வசூலைக் கூடுதலாகக் கடந்து தற்போது ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் மொத்தமாகவே அவ்வளவு வசூலைத்தான் அள்ளியது. ஆனால், 'ஜெயிலர்' படம் அந்த வசூலை 11 நாட்களில் முறியடித்துள்ளது.
இந்தப் படத்துடன் சேர்த்து தமிழ் சினிமாவில் முதல் முறையாக இரண்டு 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்தவர் என்ற சாதனையை ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த '2.0' படம் தமிழ் சினிமாவின் முதல் ரூ.500 கோடி படமாக அமைந்தது.
'ஜெயிலர்' படத்தின் இந்த புதிய வசூல் சாதனையை அடுத்து விஜய் நடிக்கும் 'லியோ' முறியடிக்கப் போகிறதா, அல்லது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' முறியடிக்கப் போகிறதா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.




