விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் | பிளாஷ்பேக் : வில்லுப்பாட்டு கச்சேரி நடத்தி குடும்பத்தை காப்பாற்றிய நடிகர் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை ஏமாற்றிய 'குமாரி' | ரஜினியை சந்தித்த சிம்ரன் | தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் |
நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் ‛லாபம்' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்திலும், 'ஹாய் நானா' என்ற புதிய படத்திலும் சுருதிஹாசன் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சுருதிஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் தன்னை பற்றிய கிசுகிசுக்கள் உலவிவரும் நிலையில், சுருதிஹாசன் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில், ‛பலர் தங்களுக்கான குழிகளை வெட்டி, குதிக்க தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதை நான் அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான். நாம் நமது வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கவேண்டும். என்னதான் இருந்தாலும் கர்மா நிச்சயம் தன் வேலையை காட்டும். அந்த விளையாட்டை மட்டும் பாருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சுருதிஹாசனின் இந்த கருத்து ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் யாரை குறிப்பிடுகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.