‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக அநீதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் ஆகியோர் நடிக்கின்றனர். கெம்ப்ரியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான இது, வாழ்வின் வினோதங்களைப் பேசும் கம்ர்ஷியல் எண்டர்டெயினர் டிராமாவாக உருவாகி வருகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் சுதா சுகுமார், ‛பல டிஜிட்டல் துறைகளில் எங்கள் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இப்போது திரைத்துறையில் கால் பதிக்கிறோம். நாங்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது. இயக்குநர் விஷால் வெங்கட் ஒரு சிறந்த இயக்குநர் அதற்கு அவரது முதல் படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்தப் படம் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்' என்றார்.
இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது: என்னுடைய முதல் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய வெற்றிக்கு என்னுடைய டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கும் எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகாவுக்கு இந்தப் படம் ஒரு முக்கியப் படமாக இருக்கும். இந்தப் படமும் மனிதர்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். கூடுதலாக ஒரு என்டர்டெயின்மெண்ட் படமாகவும் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் அர்ஜூன் தாஸ் பேசுகையில், ‛இந்த படத்தில், மிகச் சுவாரஸ்யம் காத்திருக்கிறது. நாசர் மாதிரி பெரிய ஆக்டருடன் வேலை செய்யப் போகிறேன். விஷால் மதுரை வந்து 3 மணி நேரம் கதை சொன்னார். அப்போதே ஓகே சொல்லிவிட்டேன். அவரை நம்பி முழுமையாக என்னை ஒப்படைத்து விட்டேன். அநீதி படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி. இந்தப் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். தயாரிப்பாளர்களுக்கு இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும்'என்றார்.