பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? |
அருவி, கர்ணன், அயலி, துணிவு, மாவீரன் ஆகிய படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் அருவி மதன்.
தற்போது முதல் முறையாக 'நூடுல்ஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் ஹரீஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார், ஆழியா, திருநாவுக்கரசு, மில்லர், வசந்த் ஆகியோருடன் இணைந்து அருவி மதன் நடித்துள்ளார். மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.