விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரத்திலும் அந்த ஓட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி குறித்து படத்தில் நடித்த பலரும் தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் சோசியல் மீடியாக்கள் மற்றும் டிவி சேனல்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக முக்கிய கதாபாத்திரங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் வெற்றி குறித்து தங்களது மகிழ்ச்சியை தவறாமல் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆனால் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அனைவரையும் கவர்ந்த, படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த வில்லன் நடிகர் விநாயகன் மட்டும் இவ்வளவு பெரிய வெற்றியிலும் சத்தம் காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார். படம் வெளியாவதற்கு முன்பும் சரி தற்போது வெளியாகி வெற்றி பெற்ற பின்பும் சரி அவரது பேட்டி, கருத்து என எங்கேயும் பார்க்க முடியவில்லை.
பொதுவாகவே அவர் மீடியாக்களில் பேட்டி அளித்தால் ஏதோ ஒரு வகையில் சர்ச்சை கிளம்பி விடுவது தான் இதுவரை வாடிக்கையாக இருந்து வருகிறது, கடந்த மாதம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானபோது அதுகுறித்து இவர் சோஷியல் மீடியாவில் சர்ச்சையாக பேசி வெளியிட்ட வீடியோவுக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் குவிந்தன. அதனால் தானோ என்னவோ இப்போதுவரை மீடியாக்களில் தலைகாட்ட மறுத்து ஒதுங்கி இருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.