ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது ரீமேக் படங்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது. பெரும்பாலும் ரீமேக் படங்களுக்கு சமீப காலமாக மிகப்பெரிய வெற்றி கிடைப்பதில்லை. இந்த நிலையில் தான் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ள துல்கர் சல்மானிடம், ரசிகர் ஒருவர் உங்களது தந்தையின் (மம்முட்டி) படங்களை ரீமேக் செய்து நடிப்பீர்களா என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், “நிச்சயமாக இல்லை.. காரணம் எனக்கு ரீமேக் படங்களில் எப்போதுமே உடன்பாடு இருந்ததில்லை.. படங்கள் மட்டும் அல்ல, நல்ல பாடல்களையும் ரீமிக்ஸ் செய்வதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பழைய, சிறப்பான விஷயங்களை தொடாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்பதுதான் என் பாலிசி” என்று கூறியுள்ளார். இவர் நடித்துள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆக.,24ல் வெளியாக இருக்கிறது.