ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்காக 20 கிலோ வரை வெயிட் குறைத்து அவர் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்ததும் அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்கப் போகிறார். அந்த படத்திற்காக தற்போது புது லுக்கிற்கு மாறி உள்ளார் விக்ரம். மொட்டை தலையுடன் பிரெஞ்சு தாடியுடன் ஒரு மாஸான தோற்றத்திற்கு மாறி இருக்கிறார் விக்ரம்.
நேற்று இயக்குனர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் இதே லுக்கில் தான் விக்ரம் கலந்து கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த துருவ நட்சத்திரம் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.