சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் பிறகு கார்த்தி நடிப்பில் கைதி-2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை மாற்றி ரஜினி படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் ரோலக்ஸ் படத்தை இயக்குவதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து ஒரு முழு படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், சூர்யா நடிக்கும் அந்த படத்தை முடித்த பிறகு கார்த்தி நடிக்கும் கைதி-2, கமல் நடிப்பில் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் என இயக்குவதற்கு திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.




