ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய அளவில் பிரபலமான இயக்குனராக வலம் வந்த சித்திக்கின் மறைவிற்கு பலர் நேரில் அஞ்சலி செலுத்தியும் பலர் சோசியல் மீடியா மூலமாக தங்களது இரங்கல்களையும் தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் சூர்யா சித்திக்கின் மறைவிற்கு தனது இரங்கலை சோசியல் மீடியா மூலமாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது கேரளாவில் காக்கநாட்டில் உள்ள சித்திக்கின் வீட்டிற்கே சென்று அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறி வந்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யாவை பொருத்தவரை அவரது திரையுலக பயணத்தை நந்தாவுக்கு முன் நந்தாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். நந்தாவுக்கு பின் அவரது நடிப்பிலும் தோற்றத்திலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதே சமயம் நந்தாவுக்கு முன்னதாக அவர் நடித்த படங்களில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த வெற்றிப் படம் என்றால் அது சித்திக்கின் இயக்கத்தில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம்தான். அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சூர்யா ஒரு பக்கம் காமெடியிலும் இன்னொரு பக்கம் சீரியஸான நடிப்பிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருந்தார். இந்த படம் சூர்யாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான படியாக அமைந்தது.
அதனால் தான் இயக்குனர் சித்திக்கின் மறைவால் ரொம்பவே வருத்தம் அடைந்த சூர்யா சித்திக்குடன் தான் பணியாற்றிய அனுபவம் குறித்தும் அந்த சமயத்தில் வளர்ந்து வந்த நடிகரான தனக்கு சித்திக் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் எந்த அளவுக்கு தனக்கு தன்னம்பிக்கையை தந்தது என்றும் விலாவாரியாக தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். அது போதாதென்று தற்போது நேரிலும் சென்று சித்திக்கின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார் சூர்யா.