2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இந்தியத் திரையுலகத்தின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இன்று அவரது 61வது பிறந்தநாள். அவரை கவுரவிக்கும் விதத்தில் 'கூகுள்' இணையதளத்தில் இன்று 'ஸ்ரீதேவியின் டூடுள்' வெளியிடப்பட்டுள்ளது.
“எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்குமிக்க பாலிவுட் நடிகைகளில் ஒருவர் என பரவலாகக் கருதப்படும் இந்திய நடிகை ஸ்ரீதேவியை இன்றைய டூடுள் கொண்டாடுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது கூகுள்.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து நினைவு கூர்ந்து வருகிறார்கள்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி சுமார் 5 தசாப்தங்களாக மொத்தம் 260 படங்களில் நடித்திருக்கிறார். 90 தெலுங்குப் படங்கள், 70 தமிழ்ப் படங்கள், 70 ஹிந்திப் படங்கள், 25 மலையாளத் திரைப்படங்கள், 5 கன்னடப் படங்கள் என இந்தியத் திரையுலகத்தின் முக்கிய மொழிகளில் நடித்திருக்கிறார்.