சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழ் நடிகர்களுக்கு மற்ற மொழி மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பை ஆரம்பித்து வைத்தவர் ரஜினிகாந்த். அவரது சில படங்கள் தெலுங்கு, ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடின. ஆனால், கடந்த சில வருடங்களாக ரஜினி நடித்து வெளியான படங்கள் மற்ற மாநிலங்களில் பெரிய வசூலைக் குவிக்கவில்லை. அதை தற்போது 'ஜெயிலர்' படம் முறியடித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தைத் தவிர கர்நாடகாவில் 16 கோடியும், ஆந்திரா, தெலங்கானாவில் 17 கோடியும், கேரளாவில் 11 கோடியும் என தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் 44 கோடியை வசூலித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று சிரஞ்சீவி நடித்த 'போலா சங்கர்' படம் வெளியானது. ஆனால், அப்படத்திற்கு ஆந்திரா, தெலங்கானாவிலேயே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் நாள் வசூலாக, உலக அளவில் வெறும் 33 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. அதே சமயம் 'ஜெயிலர்' படத்தின் முதல் நாள் வசூல் 90 கோடி வரை இருந்ததாகச் சொல்கிறார்கள்.
குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் 'ஜெயிலர்' படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பால், 'போலா ஷங்கர்' படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 'போலா ஷங்கர்' வெளியான பல தியேட்டர்களில் இன்று மாலை முதல் 'ஜெயிலர்' படத்தைத் திரையிட உள்ளதாகவும் தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.