டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படங்களில் புகை பிடிப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறுவதை இயக்குனர்களும், நடிகர்களும் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கடந்த பல வருடங்களாக கேட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த்தின் பழைய படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கும். ஒரு கட்டத்தில் அதற்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இனி புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என முடிவெடுத்தார் ரஜினிகாந்த். அவரது கடந்த சில படங்களில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், 'ஜெயிலர்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் சுருட்டு பிடிக்கும் காட்சிகள் அமைந்தது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் காட்சி வரும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர்.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் குடிப்பதனால் தனது வாழ்க்கை பாதிப்படைந்தது, யாரும் குடிக்க வேண்டாம் என்று பேசிய ரஜினிகாந்த், படத்தில் புகை பிடிக்கும் காட்சியில் நடித்தது பற்றி சொல்வதைத் தவிர்த்துள்ளார். குடிக்கு எதிராக ரஜினிகாந்த் பேசியதை வரவேற்றவர்கள் தற்போது அவர் படத்தில் மீண்டும் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது குறித்து எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.




