''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
மருதம் நாட்டுப்புற பாடல் நிறுவனம் 'டப்பாங்குத்து' என்ற படத்தை தயாரிக்கிறது. ஆர்.முத்து வீரா இயக்குகிறார், ராஜா பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்கிறார், சரவணன் இசை அமைக்கிறார். தெற்கத்தி பொண்ணு புகழ் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா மற்றும் ஆண்ட்ரூஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் ஆர்.முத்து வீரா கூறியதாவது: மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் நிகழ்ச்சி நடத்துவார்கள். அதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம். அதேபோல் மற்றொரு தெருக்கூத்து கலையை மையமாக வைத்து உருவாகி வருவதே டப்பாங்குத்து. திருவிழா நாட்களில் தெருக்கூத்து ஆட்டம் போடுவார்கள். அதில் ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என வித விதமாக ஆடி பாடி விடியும்வரை ரசிக்க வைப்பார்கள். அந்த கலையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டதே டப்பாங்குத்து திரைப்படம்.
டப்பாங்குத்தில் 15 வகையான நாட்டுப்புற பாடலுக்கு சரவணன் இசையமைத்துள்ளார். 'கர்ணன்' படத்தில் கிடக்குழி மாரியம்மா பாடிய “கண்டா வரச்சொல்லுங்க” என்ற பாடல் ராம்ஜி கேசட்டில் இடம் பெற்ற பாடல். அதே போல் டப்பாங்குத்து திரைப்படத்தில் ராம்ஜி கேசட்டின் உரிமை பெற்று 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. என்றார்.