'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் குறைவான படங்களில் நடித்தாலும் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர அரசியல், தொழில் துறையிலும் ஈடுபட்டு வந்தார்.
சென்னை, அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்தார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. இதை எதிர்த்து ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்பளித்த நீதிமன்றம், ஜெயப்பிரதா மற்றும் அவரது பங்குதாரர்கள் இருவர் ஆகியோருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தொழிலாளர்களிடம் வசூலித்த தொகையை தந்து விடுவதாக ஜெயப்பிரதா தரப்பு கூறியதை நீதிமன்றம் ஏற்கவில்லை. தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா மேல்முறையீடு செய்வார் என்று தெரிகிறது.