'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தமிழில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் சேரன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜெ.கே எனும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த சில வருடங்களாக இவர் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை. இனி அந்தபடம் துவங்க சாத்தியமில்லை என சேரன் கூறினார்.
இந்நிலையில் லிவ் ஒடிடி தளத்திற்காக புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார் சேரன். இதனை நடிகர் சரத்குமார் வழங்குகிறார். இந்த தொடரில் பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை 6 எபிசோடுகள் ஆக உருவாக்கியுள்ளனர். இந்த வெப் தொடருக்கு ' ஜர்னி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.




