‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. அனிரூத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக படம் ஓடி வருகிறது. நேற்று பல சினிமா பிரபலங்கள் இப்படத்தை திரையரங்குகளில் நேரில் பார்த்து கொண்டாடினர். இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றதற்கு நடிகர் நெல்சனை நடிகர் விஜய் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார் நெல்சன். இப்படம் வசூலில் அசத்தினாலும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து ஒரு சர்ச்சையும் தமிழ் சினிமாவில் ஓடி வருகிறது. இதனால் ரஜினி, விஜய் ரசிகர்கள் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர். இந்தச்சூழலில் நெல்சனுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.