சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா மற்றும் பலர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான படம் 'ஜெயிலர்'. படம் வெளியான முதல் நாளிலேயே தென்னிந்திய அளவில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி தமிழகத்தில் 22 கோடி, கர்நாடகாவில் 12 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 15 கோடி, கேரளாவில் 6 கோடி, வட இந்தியாவில் 2 கோடி, அமெரிக்காவில் 12 கோடி, இதர வெளிநாடுகளில் 20 கோடி என மொத்தமாக உலக அளவில் 89 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்த படத்திற்கு அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஒருவேளை அந்தக்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
தமிழகத்தைத் தவிர இதர தென்னிந்திய மாநிலங்களில் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வரவேற்பு கிடைப்பதாகச் சொல்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்குப் படம் மிகவும் பிடித்திருந்தாலும், நடுநிலை ரசிகர்களுக்கு இடைவேளைக்குப் பின் படம் தடுமாறுகிறது என்ற கருத்து அதிகம் வெளியாகி உள்ளது.
இந்த வார இறுதிவரை படத்திற்கான முன்பதிவு சிறப்பாக நடந்துள்ளதால் 200 கோடி வசூலை நான்கு நாட்களில் கடக்க வாய்ப்புள்ளது என்று தகவல்.




