'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” |
பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகையாக மாறியவர் ரைசா வில்சன்.. பியார் பிரேமா காதல், வர்மா, எப்.ஐ.ஆர், ஆகிய படங்களில் நடித்த ரைசா கடைசியாக காபி வித் காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெருவில் உள்ள ஒரு பூனை தன்னை கடித்து விட்டது என்று கூறிய ரைசா அதற்காக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். தெருவில் இருந்த பூனையை தூக்கி ஆசையுடன் கொஞ்ச முயற்சித்தபோது அது அவரை கடித்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி ரைசா கூறும்போது, தெருவில் இருக்கும் பூனைகள் நமது வீட்டில் இருப்பதை போல அல்ல என்று கூறியுள்ளார். இத்தனைக்கும் ரைசா தனது வீட்டிலேயே இரண்டு பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.