ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற அக்டோபர் 19ம் தேதி அன்று வெளியாகிறது. இப்போது இந்த படத்தின் பேட்ச் வொர்க் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் தகவலின் படி, இப்படம் உறுதியாக உலகமெங்கும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகிறது. சாதாரண தியேட்டரை விட ஐமேக்ஸ் தியேட்டர் அகன்ற திரை கொண்டு பெரிதாக இருக்கும். ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தை அளிக்கும். இதற்கு முன்பு தமிழில் பொன்னியின் செல்வன் ஐமேக்ஸில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது .