''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. அதே சமயம் மலையாளத்தில் இயக்குனர் சாகிர் மாடத்தில் என்பவர் ஜெயிலில் நடப்பது போன்ற வேறு ஒரு கதை அம்சம் கொண்ட படத்தை உருவாக்கி, அதற்கு ஜெயிலர் என்ற டைட்டிலையும் வைத்திருக்கிறார்.. இந்த படமும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய படமாக ஜெயிலர் வெளியாவதால் மலையாளத்தில் இந்த சின்ன ஜெயிலர் படத்திற்கு குறைவான எண்ணிக்கையிலே திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்தே ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டைட்டிலை மலையாளத்தில் மாற்றி வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து புலம்பி வந்தார் இயக்குனர். ஆனாலும் தமிழில் ஜெயிலர் படத்தை தயாரித்த நிறுவனமும் கேரள திரையரங்குகளும் இவரது கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.
அதனால் இறுதி நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்படி எதிர்பார்த்தபடியே மலையாள ஜெயிலர் திரைப்படம் தற்போது ஆகஸ்ட் 10ல் ரிலீஸ் ஆவதில் இருந்து பின்வாங்கி மறுதேதி குறிப்பிடப்படாமல் அதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.