சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

கடந்த 2021 ஆம் ஆண்டில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. செம்மர கடத்தல் கதையை மையமாகக் கொண்ட கதையில் உருவான இந்த படம் 350 கோடி வசூலித்தது. சுகுமார் இப்படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படம் புஷ்பா தி ரூல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் பஹத் பாசில் இன்று தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால், அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மொட்ட தலையுடன், கூலிங் கிளாஸ் அணிந்து, சிகரெட் பிடித்தபடி போஸ் கொடுக்கிறார் பஹத் பாஸில். இந்த படத்தில் பன்வர் சிங் ஷெராவத் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார் பஹத் பாசில்.




