மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படமும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துள்ள போலா சங்கர் திரைப்படமும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களிலுமே நடிகை தமன்னா தான் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டதுடன் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி காவாலா பாடலுக்கு மேடையில் நடனமும் ஆடினார்.
அதே சமயம் சமீபத்தில் நடைபெற்ற போலா சங்கர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா கலந்து கொள்ளவில்லை. அந்த படத்தில் இன்னொரு நாயகியாக சிரஞ்சீவியின் தங்கையாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் மட்டுமே கலந்து கொண்டார். தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமன்னா நடித்துள்ளார்,
கதைப்படி படத்தில் தமன்னாவின் கதாபாத்திரத்தை விட முக்கியத்துவமாகவும் அதிக நேரம் வரும் விதமாகவும் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் தான் இடம்பெற்றுள்ளது. அதனால் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா கலந்து கொள்ளவில்லை என்று சில செய்திகள் வெளியாகின. ஆனால் அடுத்தடுத்து குழுவாக இணைந்து அளிக்கும் பேட்டிகளில் எல்லாம் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ் உடன் தமன்னாவும் கலந்து கொண்டு வருகிறார். இதன்மூலம் தன் மீது கூறப்பட்ட வதந்தியை உடைத்துள்ளார் தமன்னா.