'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள படம் லால் சலாம். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தம்பி ராமையா, செந்தில், ஜீவிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் மீண்டும் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து இறுதிகட்டப் பணிகளை தொடங்கப் போகிறார் ஐஸ்வர்யா ரஜினி.
படப்பிடிப்பு நிறைவு நாளில் ரஜினி உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, திருவண்ணாமலையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினி, ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கடந்த நான்கு மாதங்களாக எங்கள் குழுவினர் கடுமையாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். கடைசி 22 மணி நேரம் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தினோம். லால் சலாம் குடும்பத்திற்கு மிக்க நன்றி. திருவண்ணாமலையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அதே இடத்தில் முடித்துள்ளோம். இது தற்செயலாக நடந்த நிகழ்வாக இருக்க முடியாது. உங்கள் அனைவரது ஆசியால்தான். அடுத்து லால் சலாம் படத்தின் இறுதி கட்டப் பணிக்கு செல்ல போகிறோம் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.