பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா வெற்றி தோல்விகளை கடந்து தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார் . இப்போது நடிகராக 60வது படத்தை எட்டியுள்ளார். வினோ வெங்கடேஷ் இயக்கும் இப்படத்திற்கு ' வுல்ப்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் வசிஷ்டா என் சிம்ஹா, ராய் லட்சுமி, அஞ்சு குரியன், அனசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்தை சந்தேஷ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி அன்று வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




