எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மன்மத லீலை மற்றும் தமிழ், தெலுங்கில் உருவான கஸ்டடி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் இந்த மூன்று படங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட படம் தான் பார்ட்டி. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நட்சத்திர பட்டாளம் இடம் பெற்றுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ளார். தனது படங்களை சிரமப்பட்டாவது ரிலீஸ் செய்து விடும் தயாரிப்பாளர் டி.சிவா பார்ட்டி படத்தின் ரிலீஸ் இவ்வளவு தாமதமாவது ஏன் என்பது குறித்த தகவலை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பிஜி தீவில் தான் படமாக்கப்பட்டன. அதற்கு காரணம் படத்தின் கதை ஒரு பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம் பிஜி தீவில் படப்பிடிப்பை நடத்தினால் அங்கே செலுத்தும் கட்டணத்தில் 47 சதவீதம் நமக்கு திருப்பி தரப்படும் என ஒரு சலுகை அப்போது இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சூழ்நிலை மாறி சுற்றுலா பாதிக்கப்பட்டு இது போன்று சலுகைத்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. இது போன்ற பல படங்கள் இந்த சலுகைக்காக நிலுவையில் இருக்கின்றன.
தற்போது அங்கு அரசாங்கம் மாறியுள்ள நிலையில் இது போன்ற சலுகை தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. படத்தை ரிலீஸ் செய்து விட்டால் இந்த தொகையை பெற முடியாமல் போய்விடும். அந்த அளவிற்கு இது மிகப்பெரிய தொகையும் கூட. அதனால் அந்த தொகையை பெற்ற பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மாதத்திற்குள் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறியுள்ளார்.