கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சிலர் பொது மேடையில் பேசும்போது வாய் தவறி இன்னொருவரின் பெயரையோ பட்டங்களையோ மாற்றி கூறிவிடுவார்கள். ஆனால் மிக பொறுமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிவிடும் சோசியல் மீடியாவில் கூட இதுபோன்ற குழப்பம் நடக்கும் என நிரூபித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.
கடந்த வருடம் சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர். தற்போது தெலுங்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ரோ என்கிற படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாணுடன் இந்த படத்தில் நடித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‛‛நடிகர் பவன் கல்யாணை முதலமைச்சர் என்று குறிப்பிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நமது ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாணுடன் ப்ரோ படத்திற்காக திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது பதிவு வெளியான நிமிடத்தில் இருந்து அதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் ஊர்வசி ரவுட்டேலாவை விமர்சித்தும், கிண்டலடித்தும் கருத்துக்களை வெளியிட துவங்கினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஊர்வசியின் கவனத்திற்கு இது தெரிய வந்ததும் உடனே தனது பதிவில் குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு பவன் கல்யாண் காரு என்று மாற்றிவிட்டார் ஊர்வசி ரவுட்டேலா.