மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' | படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் |

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியிலும் வெளியாக இருக்கிறது. அதற்கேற்றபடி ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கியமான நடிகர்களும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமே இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை தமன்னா ஒரு பேட்டியின் போது ஜெயிலர் பான் இந்திய படம் அல்ல என்றும், குறிப்பிடத்தக்க ஒரு பிராந்திய மொழி படம் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, "ரஜினிகாந்தை ஆராதிக்கும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக இருக்கும். தமிழ் மட்டுமல்லாது இந்த படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் உருவாகியுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் ரீச் கிடைக்கும் என தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர். ஜெயிலர் பான் இந்திய படம் அல்ல. மற்ற பிராந்திய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிடுகின்றனர்" என்றும் கூறியுள்ளார்.




