பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... | தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி | தணிக்கையில் பிரச்னை... மாற்றம் வேண்டும் என்கிறார் கமல் | கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம் | பிளாஷ்பேக் : ஒரேநாளில் மோதி வெற்றி பெற்ற 3 ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா | 'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு |

தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிக அளவிலான படங்களுக்கு மீண்டும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க துவங்கி இருந்தாலும். இன்னொரு பக்கம் முன்னணி ஹீரோக்களின் படங்களை அனிருத் தன்வசம் இழுத்துக் கொண்டாலும், யுவன் சங்கர் ராஜாவின் இசை பயணம் எந்த தடங்கலும் இல்லாமல் சீராகவே சென்று கொண்டிருக்கிறது. தற்போதும் பிசியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. அது மட்டுமல்ல, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடும்போது அடுத்ததாக எந்த இசையமைப்பாளருடன் இணைந்து ஒரு பாடலுக்கு நான் பணியாற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.
ரசிகர்கள் ஆளாளுக்கு ஒருவரை கூறினாலும், சர்ப்ரைஸ் ஆக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தானே வான்டட் ஆக முன்வந்து, "இதோ கிளம்பிட்டேன்" என்று கமெண்ட் தெரிவித்து, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் சந்தோஷ் நாராயணனின் விருப்பத்திற்கு தங்களது வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.