40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் | பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை இசை அமைப்பாளராக்கிய ஸ்ரீதர் | திரையுலகில் 50 ஆண்டுகள்: முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா நடத்தும் எழுத்தாளர் சங்கம் | ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் |
மீசையை முறுக்கு நடிகர் ஆனந்த் இயக்கி, நடித்துள்ள படம் ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இதில் குமரவேல், ஆர்.ஜே.விஜய், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.எச். காசிப் இசையமைத்துள்ள இப்படத்தை மசாலா பாப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சில வருடங்கள் கடந்தும் வெளியாகவில்லை. தற்போது படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் வெங்கட்பிரபு நேற்று அடுத்து என பதிவிட்டு இன்று 11 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் இது அடுத்து அவர் விஜய்யை வைத்து இயக்க உள்ள 68வது படத்தின் அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் வெளியிட்டது ‛நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை பற்றி தான். வெங்கட்பிரபு கிப்ட் என குறிப்பிட்டு இந்த படத்தின் புரொமோ வீடியோ வெளியிட்டார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வழங்குவதாக தெரிகிறது. மேலும், கிடப்பில் இருந்த இப்படத்தை வெங்கட் பிரபு தனது ப்ளாக் டிக்கெட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் என கூறப்படுகிறது.