''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சமுத்திரக்கனி இயக்கத்தில் தமிழில் ஓடிடியில் வெளிவந்த 'வினோதய சித்தம்' படம் தெலுங்கில் 'ப்ரோ' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஜுலை 28ல் வெளியானது. பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் மற்றும் பலர் நடித்த இப்படத்திற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் இப்படம் ஆந்திரா, தெலங்கானாவில் மொத்த வசூலாக 50 கோடியையும், உலகம் முழுவதும் மொத்தமாக 70 கோடியையும் கடந்து வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் மொத்த வியாபாரம் சுமார் 100 கோடி வரை நடந்துள்ளதாம். அதனால், அதற்கும் அதிகமாக வசூலித்தால் மட்டுமே படம் லாபத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இன்னும் 50 கோடி வசூலைக் கடந்தால் படம் லாபம் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் நல்ல முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அடுத்த சில நாட்களில் அந்த 50 கோடி வசூலைக் கடந்துவிடும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஆந்திரா, தெலங்கானாவில் கடும் மழை பெய்து வரும் சூழ்நிலையிலும் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.