ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெலுங்கில் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மோகன்லால். இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சிவரஞ்சனி தொண்ணூறுகளின் துவக்கத்தில் சின்ன மாப்ளே, காத்திருக்க நேரமில்லை, தலைவாசல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர். தற்போது தனது மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சமீபத்தில் துவங்கிய விருஷபா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிவரஞ்சனி சென்டிமென்டாக படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.