லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பீர்த் சிங், விவேக், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சுமார் ரூ.200 கோடிக்கு மேல் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் பிஸ்னஸ் மீண்டும் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ ரைட்ஸை ரூ.23 கோடிக்கு சரிகமபா நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையெனில் இந்தியன் 2 படம் தான் இந்திய சினிமாவிலே அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமை வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.