‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த திரைப்படம் வேதாளம். தற்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இதனை இயக்குனர் மெகர் ரமேஷ் இயக்குகிறார். தெலுங்கு ரீமேக்கில் போலா சங்கர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமன்னா, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஏற்கனவே இந்த படத்தின் டப்பிங் பணிகளை சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், சுஷாந்த் ஆகியோர் முடித்ததை தொடர்ந்து தமன்னாவும் இப்படத்தின் டப்பிங் பணிகளை முடிந்துள்ளதாக இயக்குனர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.