மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா |

பிரபாஸ் மற்றும் கமல் முதல் முறையாக இணைந்து நடிக்கும் புராஜக்ட் கே படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நேற்று அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமலும் நேரில் கலந்து கொண்டார். படத்திற்கு ‛கல்கி 2989எடி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்த நிகழ்விற்கு நேரில் வராவிட்டாலும் காணொளி மூலமாக கலந்து கொண்டு படக்குழுவினருடன் உரையாடினார். அப்போது அமிதாப்பச்சனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சில ஆச்சரிய தகவல்களை கமல் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி கமல் கூறும்போது, 'நான் ஷோலே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அந்தப் படம் ரிலீஸான போது படத்தை பார்த்துவிட்டு அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு டெக்னீசியனாக அந்த படத்தை வெறுத்தேன். நான் எவ்வளவு பெரிய இயக்குனர்களுடன் பணி புரிந்திருக்கிறேன் என்று தெரிந்தாலும் அப்போது என்னுடைய ரியாக்ஷன் அதுவாக தான் இருந்தது. ஆனால் அமிதாப் ஜி என்னுடைய பல படங்களை பற்றி நல்ல விஷயங்களை பேசி உள்ளார்” என்று கூறினார்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், கமல் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷோலே திரைப்படமும் கமல், ரஜினி இணைந்து நடித்த ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் திரைப்படமும் ஒரே நாளில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.